×

ஸ்டான்லி மருத்துவமனையில் தொற்றால் உயிரிழந்தவர்களிடம் பணம், செல்போன்கள் திருட்டு: உறவினர்கள் போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: புழல் நீதிதாசன் தெருவை சேர்ந்த 38 வயது நபர் கடந்த 30ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து அவருடைய அண்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், இறந்தவர்களின் செல்போன் மற்றும் இரண்டாயிரம் பணம் வைத்திருந்ததாகவும் அதனை உறவினர்கள் கேட்டபோது மருத்துவ மனை நிர்வாகத்தினர் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி கலைய வைத்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தனர். இதேபோல், கடந்த மாதம் வண்ணாரப்பேட்டை காட்பாடா பகுதியை சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவை திருடுபோனது குறிப்பிடத்தக்கது.


Tags : Relatives ,Stanley Hospital ,survivors , Stanley Hospital, infected, money, cell phones, theft, relatives, police report
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...