அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு: விடுபட்ட மாணவர்களுக்காக 27ம் தேதி பிளஸ் 2 தேர்வு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 13ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதற்குள் பாடபுத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார். அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மார்ச் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வை சில மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.  விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை வரும் 27ம் தேதி நடத்தப்படும்.  மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

இதற்கான புதிய ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்தும், பள்ளிகள் மூலமாகவும் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை அதேநாளில் தனித் தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: