ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 106 நாளில் 7.50 லட்சம் வழக்குகள் பதிவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 6 தேதி முதல் சில தளர்வுகள் உடன் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 106 நாளில் 7 லட்சத்து 50,620 வழக்குகள் பதிவு செய்து 8 லட்சத்து 23,488 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 24, 720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 17 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 276 ரூபாய் அபராதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: