சென்னையில் மட்டும் 1,261 பேருக்கு பாதிப்பு தமிழகத்தில் நேற்று 3,756 பேருக்கு கொரோனா: மற்ற மாவட்டங்களில் 2,495 பேருக்கு தொற்று; உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில்  தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது தினசரி 1000 முதல் 1500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் தினசரி 2,000 முதல் 2,500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதேப்போன்றுதான் நேற்று சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 3,579 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,261 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,495 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 34,962 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3,756 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 3,693 பேர். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 63 பேர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,261 பேர், மதுரை 379, திருவள்ளூர் 300, வேலூர் 160, செங்கல்பட்டு 273, தூத்துக்குடி 141, காஞ்சிபுரம் 133, கன்னியாகுமரி 115, விழுப்புரம் 106, தேனி 75, கடலூர் 71, விருதுநகர் 70, ராமநாதபுரத்தில் 65 பேர், தி.மலையில் 55 பேர், தென்காசியில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,292 பேர் ஆண்கள். 1,464 பேர் பெண்கள். தற்போது வரை 74,842 ஆண்கள், 47,468 பேர் பெண்கள், 22 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,051 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் 46,480 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் கொரோனாவுக்கு 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 26 பேர். இதைத்தவிர்த்து மதுரையைச் சேர்ந்த 9 பேர், திருவள்ளூரைச் சேர்ந்த 6 பேர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த 5 பேர், தேனியைச் சேர்ந்த 4 பேர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கையைச் சேர்ந்த தலா 2 பேர், திருச்சி, தஞ்சை, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவையைச் சேர்ந்த ஒருவர் என்று மொத்தம் 64 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனாவால் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: