108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாதாரண சூழலிலும் பொதுமக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் சேவை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டாலும், பராமரிப்புக்கான செலவை தமிழக அரசே செய்து வருகிறது.

ஆனால், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விடுப்புக்கான தொகையை ஆம்புலன்ஸ் நிர்வாகம் வழங்கவில்லை. மேலும், கரூர் மாவட்டத்தில் நடந்த ரேடியேட்டர் ஊழலை மறைக்க, தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக இறுதி விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகி ராமராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகி புண்ணியகோட்டி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பிரேம்குமார், ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெற்றது. மேலும் சட்டப்படியான உள்விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக தொழிலாளர்கள பணியிடமாற்றம் செய்வதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக இடைவெளியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, சொந்த மாவட்டத்தில் பணி, கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் வழங்குதல், வாரத்தில் 2 நாள் விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மதுராந்தகம் போலீசார், அவர்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: