கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு: ஊழியர்களை முற்றுகையிட்டு நோயாளிகள் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த எழுச்சூர் கிராமத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி, தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கபடுகிறது. தற்போது இந்த சிகிச்சை மையத்தில் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து மாத்திரைகள், முறையாக வழங்கவில்லை என கூறி கொரோனா நோயாளிகள், ஊழியர்களுடன் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் உணவு வழங்கி வருவதால், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அங்கு சென்று, நோயாளிகளிடம் சமரசம் பேசினர். பின்னர் அவர்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தனர். தொடர்ந்து, கழிப்பறையை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories: