‘உஷ்ஷப்பா’ 3 மாதமாகியும் இன்னமும் கண்ணைக் கட்டுதே... பாலியல் தொழிலுக்கு ‘சமூக இடைவெளி’ எப்படி சாத்தியம்? கிரேக்க அரசின் கெடுபிடியால் குமுறும் தொழிலாளர்கள்

ஏதென்ஸ்: கிரேக்க நாட்டில் கொரோனா ஊரடங்கு 3 மாதத்திற்கு பின் தளர்த்தப்பட்டுள்ளதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அந்த தொழிலில் ஈடுபட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலில் இருந்த மூன்று மாத ஊரடங்கு முடிவுக்கு வந்ததால், கிரேக்க நாட்டின் மத்திய ஏதென்ஸ் நகரில் பாலியல் தொழில் விடுதிகள் தற்போது களைக் கட்டி வருகின்றன. வெனிசுலா நாட்டை சேர்ந்த பெண்களே அதிகமாக பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர். மூன்று மாதமாக கடும் நிதிநெருக்கடியில் தவித்த அவர்கள், ஊரடங்கு தளர்வால் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். வேறுவழியின்றி பாலியல் தொழிலுக்கு பலர் திரும்பிவிட்டனர். வாடிக்கையாளர்கள் வருகை அதிகமாக இருப்பதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மத்தியில் சலசலப்பும் உள்ளது.

தற்போது பாலியல் தொழிலுக்கான ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்கூட, கிரேக்க அரசாங்கம் சில ‘கன்டிஷன்’களை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, ‘வாடிக்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் கொரோனா பரவலை தடுக்க சோஷியல் டிஸ்டன்ஸ்(சமூக இடைவெளி) கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் பயன்படுத்த வேண்டும்’ என்றெல்லாம் அறிவித்துள்ளது. ஆனால், அரசின் அறிவிப்பு பாலியல் தொழிலாளிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களை ‘திருப்தி’படுத்த முடியாத நிலையில், எப்படி விதிமுறைகளை கடைபிடிப்பது என்ற கவலையுடன் உள்ளனர்.

இதுகுறித்து கிரேக்க நாட்டின் பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் டிமித்ரா கனெல்லோபவுலோ கூறுகையில், ‘இந்த மூன்று மாதங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டோர் தங்களது பசியை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. பாலியல் தொழிலுக்கு கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகள் விதிக்கும் அதிகாரிகள் நடவடிக்கை நம்பத்தகுந்தவையாக இல்லை. கேலிக்குரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் அறையில் கைகுலுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அறைக்குள் வாடிக்கையாளரை அழைத்து சென்றால் எல்லாம்தான் நடக்கும். அரசின் உத்தரவால் என்ன பயன்? பாலியல் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், நேருக்குநேர் ‘தொடர்பு’ கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்துகின்றனர். முகக் கவமும் அணிய வேண்டுமாம். இது ஒரு நகைச்சுவையாக உள்ளது.

வாடிக்கையாளரை முகக் கவசம் அணிந்தபடி, பாலியல் தொழிலாளி எப்படி சந்தோசப்படுத்தப் போகிறாள்? அதிகாரிகளின் உத்தரவு ஆச்சரியமாக இருக்கிறது. அப்புறம், இங்கு வரும் வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட பட்டியலை தயாரிக்கவும் கூறுகின்றனர்’ என்றார். மேலும், பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் ரெட் அம்ப்ரெல்லா ஏதென்சுக்கு தலைமை தாங்கும் திருநங்கை குரூபூ கூறுகையில், ‘இன்றைய நிலையில் பாலியல் தொழிலுக்கு மிக மோசமான காலம்.  எய்ட்ஸ் ெதாற்று பரவிய காலத்தில், ஆணுறை கட்டாயமக்கப்பட்ட போது நிலைமையை சமாளித்தோம். கொரோனா தொற்று பரவிய பின், இப்போது எங்களை பாதுகாக்க எந்த வழியும் இல்லை. கிரேக்க அரசு பாலியல் விடுதிகள் இயங்குவதை தடை செய்ததால், பலர் அரசு உதவி கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

ரெட் அம்ப்ரெல்லா ஏதென்சின் புள்ளிவிபரபடி, 600-க்கும் மேற்பட்ட பாலியல் விடுதிகள் கிரேக்கத்தில் சட்டவிரோதமாக இயங்குகின்றன. ஏதென்ஸ் நகரில் சட்டத்துக்கு உட்பட்டு ஒரு பாலியல் விடுதியும் இல்லை. பாலியல் தொழிலில் 1,00,000-க்கும் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் அரசிடம் முறையாக பதிவு செய்து பணப்பயன் பெற்றவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் சேவைகளுக்காக பணம் செலுத்த கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த சொல்கின்றனர். இது சட்டவிரோதமாக இயங்கும் பாலியல் விடுதிகளில் எப்படி செயல்படுத்த முடியும். நாங்கள் கொரோனா தொற்றுநோய்க்கு பயப்படவில்லை. ஆனால், அரசாங்கத்தால் போடப்பட்டுள்ள உத்தரவுகளை கண்டுதான் பயப்படுகிறோம்’ என்றார்.

Related Stories: