×

தனிமைப்பிரிவில் இருந்து தப்பி ஷாப்பிங் சென்ற இந்திய வாலிபர்

மெல்போர்ன்: டெல்லியில் இருந்து கடந்த 3ம் தேதி 32 வயது நபர் ஒருவர் நியூசிலாந்து சென்றுள்ளார். அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கடந்த புதனன்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் ஆக்லாந்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நே்றறு முன்தினம் மாலை சுமார் 7 மணியளவில் தனிமைப்பிரிவில் இருந்து தப்பி அவர் வெளியே சென்றுள்ளார். விக்டோரியா செயின்ட் வெஸ்ட் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சுமார் 20 நிமிடங்கள் செலவு செய்துள்ளார். பின்னர் தானாக மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்பிரிவில் இருந்து தப்பிச்சென்ற அவருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது 4000 டாலர்கள் அபராதம் விதிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.


Tags : Indian , In isolation, escaped shopping, Indian youth
× RELATED 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...