×

பாடப்பிரிவு குறைப்பில் சர்ச்சை நடப்பு கல்வியாண்டில் மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படாது: சிபிஎஸ்இ விளக்கம்

புதுடெல்லி: ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட தலைப்புக்களில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படாது’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து இருந்தார். முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு பிற பகுதிகளில் இருந்து 30 சதவீதம் வரை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயக உரிமைகள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி குடியுரிமை மற்றும் மதசார்பின்மை ஆகிய தலைப்புக்கள் பாடப்பிரிவுகளில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தொடர்பாக முடிந்தளவிற்கு மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டுள்ள பாடங்களில் இருந்து 2020-2021ம் கல்வி ஆண்டில் மட்டும் தான் தேர்வுகளில் எந்த கேள்விகளும் கேட்கப்படாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : CBSE , Course, Controversy, Academic Year, Questions, Not Asked, CBSE Explanation
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...