×

வீழ்ச்சி பாதையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் நாட்டில் டிஜிட்டல்  பரிவர்த்தனைகள் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால், ஆன்லைன் கல்வி, பில் கட்டண சேவைக்கு மவுசு அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மார்ச் தொடங்கியே மூடப்பட்டுள்ளது. எனினும் பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் மூலமான வகுப்புக்களை தொடங்கி நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ஆன்லைன் கல்வி சேவையானது 23 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்து முடக்கம், கட்டுப்பாடுகள், வெளியே சென்றால் நோய் பரவும் அச்சம் காரணமாக பல துறைகளில் ஆன்லைன் மூலமாக கட்டணங்கள் செலுத்துதல் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் செல்போன், மின்கட்டணம், அத்தியாவசிய பொருட்களுக்கான ஆர்டர்களை ஆன்லைனில் வழங்குதல் என வெளியே செல்லாமல் அனைத்தையும் வீட்டுக்குள் இருந்தே செல்போன் மூலமாக செய்துவிடுகின்றனர். இந்த ஆன்லைன் பில் கட்டண சேவை 163 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஓட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த மார்ச் 24முதல் கடந்த 2ம் தேதி வரையிலான கால கட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனை 12 சதவீதம் குறைந்துவிட்டது. வருமானம் குறைந்து வருவதன் காரணமாக மக்கள் கடனை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள அவகாச சலுகையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சலுகையை பயன்படுத்துவோர் 290 சதவீதம் அதிகரித்துள்ளது. இஎம்ஐ செலுத்துவதற்கான அவகாசம் கோருவோரின் எண்ணிக்கை 125 சதவீதமாக உயர்ந்துள்ளது.  
நேரடி பண பரிமாற்றத்துக்கு பதிலாக மக்கள் அதிக அளவு டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவது இந்த ஆண்டு அதிகரிக்கலாம் எனினும். இ வர்த்தகம், பயணம், கடன், பொழுதுபோக்கு துறைகளில் தனிப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வழக்கத்தை விட குறைவதற்கு வாய்ப்பு நிலவுகிறது. இவை  ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனை துறையின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags : Fall Path, Digital, Transactions
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!