×

ஐஐடி மாணவர்கள் அசத்தல் பிளாஸ்மா தானம் செய்ய புதிய ஆப்

புதுடெல்லி:  டெல்லி ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இணைந்து கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்தும் வகையில் பிளாஸ்மா வங்கியை உருவாக்கும் நோக்கத்துடன் புதிய ஆப்பை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித் தவர்களை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது நல்ல பலனை தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்தத்திலன் பிளாஸ்மாவின் அந்த நோய்க்கு எதிரான ஆன்டிபாடி இருக்கும். இதனை வைத்து இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைகின்றனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு வந்தவர்கள் ரத்ததானம் செய்யுமாறு பலரும் அறிவுறுத்துகின்றனர்.

இதற்காக, டெல்லியில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே பிளாஸ்மா சிகிச்சைக்ககாக ரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்களின் தகவல்களை ஒன்று திரட்டவும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது ரத்த வகையை குறிப்பிட்டு ரத்ததானம் கேட்டு கோரிக்கை வைக்கும் வகையிலும் கோபல்-19 (copal-19) என புதிய செயலியை உருவாக்கி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர் அபிநவ் சிங் வர்மாவுடன் இணைந்து டெல்லி ஐஐடி மாணவர்கள் காஷிகா பிரஜாபத், துஷார் சவுத்ரி மற்றும் எம்எஸ்ஐடி மாணவர் தனாய் அகர்வால் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த ஆப்பை உருவாக்கி உள்ளனர். இந்த ஆப்பின் மூலம் பிளாஸ்மா தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் பட்டியலை பெறலாம் என்றும் இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிளாஸ்மா சிகிச்சை அவசியம் என்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானத்தை எளிதாக பெறலாம் என்றும் ஆப்பை உருவாக்கிய ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : IIT , IIT Students, Waste, Plasma Donation, New App
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!