ராஜிவ் காந்தி அறக்கட்டளையில் நடந்த நிதி முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைவராக உள்ள ராஜிவ் காந்தி அறக்கட்டளை, ராஜிவ் காந்தி தொண்டு அறக்கட்டளை மற்றும் இந்திய காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்த விசாரணையை ஒருங்கிணைந்து நடத்த, பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென அமைத்துள்ளது. இதனால், தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த  போதிலும், பிரதமர் மோடி சீனாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக ராகுல் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜ தலைவர்கள், தனது ஐமு கூட்டணி ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு வர்த்தக சலுகைகளை வழங்குவதற்காக, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு காங்கிரஸ் நன்கொடை பெற்றதாக குற்றம்சாட்டினர்.

இவ்வாறு இருதரப்புக்கும் இடையே வார்த்தை மற்றும் அறிக்கை போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில், காங்கிரசுக்கு மேலும் நெருக்கடி  கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைவராக உள்ள ராஜிவ் காந்தி அறக்கட்டளை, ராஜிவ் காந்தி தொண்டு அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை போன்றவற்றில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், அவற்றை ஒருங்கிணைந்து நடத்தவும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த கூட்டுக்குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அமைத்தது. இதற்கு, அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் சிறப்பு இயக்குனர் தலைமை வகிப்பார்,’ என்று டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

பழிவாங்கும் நடவடிக்கை: பாஜ.வின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அறக்கட்டளையின் எல்லா கணக்குகளும் முறையாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. மத்திய அரசின் செயல், முழுமையான அரசியல் பழி்வாங்கும் நடவடிக்கையாகும்,’ என்று கூறப்பட்டுள்ளது. பாஜ தலைவர் கேள்வி: பாஜ தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், ‘‘மன்மோகன் சிங் தலைமையிலான ஐமு கூ்டடணி ஆட்சியின்போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு தொடர்ந்து நன்கொடை வழங்கப்பட்டது, ஏழைகளின்  உதவ வேண்டிய நிதியை எடுத்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு மன்மோகன் சிங் அரசு வழங்கியது எந்த வகையில் நியாயமானது?,’’ என்றார்.

* அறக்கட்டளை நிர்வாகிகள்

ராஜிவ் காந்தி அறக்கட்டளை 1991ம் ஆண்டும், ராஜிவ் காந்தி தொண்டு அறக்கட்டளை 2002ம் ஆண்டும் தொடங்கப்பட்டன. இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அதற்கு முன்பே, 80ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. இவை மூன்றின் நிர்வாக குழுவிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: