அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு...! பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தற்போது வலியுறுத்தி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு பின்பற்றக்கூடிய வழிமுறைகளையும் மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில் எவ்வாறு தமிழக அரசு வழங்கிறதோ அதே போல இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலமாக தான் சமூக நீதி காக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கின்றார். எனவே கிரீமிலேயர் என்ற பிரிவினை தனியாக எடுத்து, அவர்களுக்கு சம்பளத்தை கணக்கிடுவதற்கான புதிய முறையை பின்பற்றக் கூடாது என்றும், ஏற்கனவே இருக்கும் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

Related Stories: