×

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். செங்கல்பட்டு நகரில் பாதிப்பு அதிகம் உள்ள நத்தம், தட்டான்மலை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். கொரோனா பாதித்த இடங்களை பார்வையிட்ட மத்திய குழு செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்லாவரம், பரங்கிமலை, தாம்பரம், செம்பாக்கம், அனங்காபுத்தூர், பம்மல், சிட்லாக்கம், மீனம்பாக்கம், மேடவாக்கம், பெருங்களத்துர், பீர்க்கன்காரனை உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் நோய்தொற்றை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் நோய்தொற்று குறையவில்லை.  போலீஸ், நகராட்சி ஆணையர், அரசு டாக்டர்கள், அரசு ஊழியர்கள் என பலருக்கும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. வயதானவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் என்று கூறினர். ஆனால் இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை குழு, செங்கல்பட்டில் தொற்று பரவல், கொரோனா உயிரிழப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்தியகுழு ஆய்வு நடத்தனர். செங்கல்பட்டு நகரில் பாதிப்பு அதிகம் உள்ள நத்தம், தட்டான்மலை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

Tags : district ,Chengalpattu , Corona, Chengalpattu, Central Committee, Inspection
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்