என்னுடைய வாழ்வில் இதுபோன்ற ஒரு கொடிய நோய்த்தொற்றை கண்டதில்லை: கொரோனாவில் குணமடைந்த 107 வயது முதியவர் பேட்டி

டெல்லி: இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு டெல்லியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் வசித்து வரும் முக்தார் அகமது என்ற 107 வயது முதியவருக்கும், அவரது 70 வயது மகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா மையத்தில் அளித்து வந்த சிகிச்சையில் அவர்கள் இருவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்பு பாதிப்பிலிருந்து முதியவர் முழு அளவில் குணமடைந்தார். அவரது மகன், மனைவி மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என 4 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். தனது மகனை விட முதியவர் வெகுவிரைவில் குணமடைந்தது அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது.

கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூ நோய் பாதிப்பு ஏற்படும்பொழுது முதியவருக்கு 4 வயது ஆகியிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நான் பிழைப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் முறையான சிகிச்சை கிடைத்ததில் நான் குணமடைந்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நோய்த்தொற்றை ஒருபோதும் கண்டதில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories: