தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு; 13-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்...! அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 13 முதல் 17 வரை தேர்வு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை.

ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது 27 ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 13 ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கான புதிய நூழைவுச் சீட்டை www.dge.tn.go.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடித்த பின்னர், 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. மாணவர்கள் தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: