×

நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை..!!

டெல்லி: நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் சுய உறுதி மொழிப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயக்கும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பருவத் தேர்வை நடத்திட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சத்தின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ளன.

அதேசமயம், இனிமேல் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பருவத் தேர்வுகள் நடத்தப்படுமா, அப்படி நடத்தப்படாதபட்சத்தில், எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பெற்றோர் மத்தியில் இருந்து வருகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.

Tags : Central Human Resources Department ,country ,Union Human Resources Department , The Union Human Resources Department has issued guidelines for conducting university exams across the country .. !!
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!