×

கொரோனா காலத்தில் கடை திறப்புக்கு எதிர்ப்பு!: ஆந்திராவில் மதுக்கடைக்கு தீ வைத்து பெண்கள் முற்றுகை போராட்டம்!!!

ஹைதராபாத்: ஆந்திராவில் கொரோனா பரவும் அச்சத்தில் மதுக்கடைக்கு தீ வைத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்த பிறகு முதல் முறையாக மாநில அரசுகள் பெரும் இழப்பை சந்திப்பதாக கூறி மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்த மதுக்கடைகள் திறப்பதன் காரணமாக மதுபிரியர்கள் ஒன்று சேர்ந்து மதுக்கடையில் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மதுபிரியர்கள் அதிகளவில் கூடுவதன் காரணமாகவே கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காவேரி மண்டலம் கோழிகூறுபாடு என்ற பகுதி பசுமை மண்டலமாக இருந்து வருகிறது. இருப்பினும் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நாகபட்லா, புதுலி, மறுசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அவை சிவப்பு மண்டலமாக உள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடிமகன்கள் அனைவரும் தங்கள் கிராமங்களுக்கு வந்து மது வாங்கி, ஆங்காங்கு அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

இதனால் பச்சை மண்டலமாக இருக்கின்ற தங்கள் பகுதி சிவப்பு மண்டலமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மதுக்கடையை மூட வேண்டும் என கூறி பெண்கள் அனைவரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை ஏற்காமல் அங்குள்ள ஊழியர்கள் மதுக்கடையை திறக்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள ஊழியர்களை வெளியேற்றி மதுபாட்டில்களை வெளியே வீசி எரிந்து அனைத்தையும் தீயிட்டு கொளுத்தினர். தொடர்ந்து மீண்டும் இப்பகுதியில் மதுக்கடையை திறக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : opening ,Corona , Opposition to shop opening during Corona era!
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு