×

வெளியூர் அனுப்ப முடியாததால் சாலையோரம் பழங்கள் விற்கும் விவசாயிகள்

குன்னூர்: வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் பழ வகைகளை சாலையோரம் வைத்து விவசாயிகள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலா, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். உற்பத்தியாகும் பழங்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் சரக்கு வாகனங்களை இயக்க டிரைவர்கள் முன்வராதது போன்ற காரணங்களால் பழங்களை அனுப்புவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் பழ வகைகள் விரைவில் அழுகி விடும் சூழல் உள்ளது. எனவே வேறு வழியின்றி பழ வகைகளை சாலையோரங்களில் குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பின்னால் ஓடி ஓடி விற்பனை செய்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : road , Roadside, selling fruit, farmers
× RELATED மயிலாடுதுறை அருகே நெல் விதைப்பை...