×

மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிசி கிரிமிலேயர் கணக்கீட்டிற்கு சம்பளத்தை அளவீடாக நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள கடிதத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும்.

*மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்க : மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதுமே உள்ளது.
 
 *நீட் தேர்வினை ரத்து செய்தல் : நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.  நீட் தேர்வானது, மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே சாதகமான ஒன்ற.  2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சட்டத் திருத்தம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்னல்களையும் தடைகளையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் நான் உங்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,MK Stalin ,NEET Eligibility Test for Medical Studies ,cancellation , Medical Study, Need, Eligibility Test, Cancellation, 3 Requests, PM Modi, MK Stalin, Letter
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...