×

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து தங்க புதிய வாய்ப்பு; வாஷிங்டனில் உள்ள தூதரகத்தை அணுக வேண்டுகோள்!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் விசாக்களில் சில தற்காலிக மாற்றங்களை டிரம்ப் அரசு செய்து இருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாடப் பிரிவு முழுவதும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி விட்டால் அவர்கள் அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டின் குடிவரைவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. நேரடியாக கல்வி கற்கும் படி, பாடத் திட்டத்தை மாற்றிக் கொண்டால் மட்டுமே அமெரிக்காவில் தொடர்ந்து தங்குவதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தது. டிரம்ப் அரசின் இந்த திடீர் அறிவிப்பால், அமெரிக்காவில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 2020 கல்வி ஆண்டில் மட்டும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், F 1 மற்றும் M 1 விசா விதிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் விதமாக மாணவர்களுக்கு அதில் தற்காலிக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்த விவரங்களை அமெரிக்க துணை தூதரங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. விசா ரத்து அறிவிப்பால்,அதிர்ச்சி அடைந்திருந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சற்று ஆறுதல் அளித்துள்ளது.


Tags : Washington ,embassy ,United States , US, Foreign, Students, New Opportunity, Washington, Embassy
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...