×

நீண்ட நாட்கள் கெடாத பால், அதிக கொழுப்பு சத்துக் கொண்ட பால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மோர், லெஸ்ஸி... :ஆவினின் 5 புதிய பொருட்கள் அறிமுகம்!!\

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், இருந்து ஆவின் பொருட்களை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 பொருட்களை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆவின் நிறுவனத்தின் சார்பில், அறிமுகப்படுத்தியுள்ள ஐந்து புதிய பொருட்களின் விவரம்
 
*கொரோனா வைரஸ் தொற்று காலக் கட்டத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம். ஆகவே ஆவின் நிறுவனம் மூலிகைகள் நிறைந்த ஆவின் மோரை தயாரித்துள்ளது.  
 
*ஆவின் நிறுவனம் சாதாரண லெஸ்ஸி மற்றும் புரோ பையோடிக் என்ற இரண்டு வகை லெஸ்ஸிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சாக்லெட் சுவைமிகுந்த சாக்கோ லெஸ்ஸி மற்றும் மாம்பழச்  சுவையுடன் கூடிய மேங்கோ லெஸ்ஸி என்ற இரண்டு புதிய லெஸ்ஸிகளை ஆவின் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

* நீண்ட நாட்கள் கெடாத வகையில் ஆவின் பால் அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு,  FLEXI பேக்குகளில் அடைக்கப்பட்டு  அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த  பால் பாக்கெட்டுகளை குளிர்சாதன  பெட்டியில் வைக்க தேவையில்லை. அறை வெப்பநிலையில்வைக்கும் பொழுது, 90 நாட்கள்  வரை கெடாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது.

*உணவகங்கள், தேனீர் கடைகள், விடுதிகள் மற்றும் சமையல்கலை வல்லுநர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, அதிக கொழுப்பு சத்துக் கொண்ட டீ மேட் என்ற புதிய பால் அறிமுகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால்,  தேனீர்  கடைகள் மற்றும் உணவகங்களில் அதிக அளவிலான டீ மற்றும் காபி தயாரிப்பதற்கு இந்த பால் உபயோகமாக இருக்கும்.


Tags : Lessy , Bad milk, high cholesterol, milk, immunity, buttermilk, Lessy, Avin
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...