×

டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்வு; இதுவரை 20,642 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்தை தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,752 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 20,642 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 482 உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 4,56,830 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16,882 பேர்  குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,250 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 1,18,558 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்  1,18,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 71,116 பேர்  குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,02,831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,  3,165 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 74,217 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு  முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 12,522 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 8,329 பேர் குணமடைந்தது.
பீகாரில் 12,570 பேருக்கு பாதிப்பு; 104 பேர் பலி; 9,284 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 494 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 401 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 3415 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,751 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,903 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 1156 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 37,550 பேருக்கு பாதிப்பு; 1,977 பேர் பலி; 26,720 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 17,999 பேருக்கு பாதிப்பு; 279 பேர் பலி; 13,645 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,704 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,248 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 5,894 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 3452 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 21,404 பேருக்கு பாதிப்பு; 472 பேர் பலி; 16,575 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,996 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 2104 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 1041 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 836 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,430 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 771 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 80 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 197 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 133 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 625 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 243 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 10,097 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 6,703 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 930 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 434 பேர் குணமடைந்தது.
பஞ்சாப்பில் 6,749 பேருக்கு பாதிப்பு; 175 பேர் பலி; 4,554 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 3,230 பேருக்கு பாதிப்பு; 43 பேர் பலி; 2,621 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 26,815 பேருக்கு பாதிப்பு; 416 பேர் பலி; 11,098 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 8,931 பேருக்கு பாதிப்பு; 143 பேர் பலி; 5,399 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 27,612 பேருக்கு பாதிப்பு; 313 பேர் பலி; 16,287 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 23,837 பேருக்கு பாதிப்பு; 804 பேர் பலி; 15,790 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 29,968 பேருக்கு பாதிப்பு; 827 பேர் பலி; 19,627 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 21,197 பேருக்கு பாதிப்பு; 252 பேர் பலி; 9745 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 276 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 105 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 15,627 பேருக்கு பாதிப்பு; 622 பேர் பலி; 11,768 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 1083 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 790 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 147 பேருக்கு பாதிப்பு; 75 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
தாதர் நகர் ஹவேலியில் 405 பேருக்கு பாதிப்பு; 183 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 125 பேருக்கு பாதிப்பு; 70 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : India ,Delhi , Damage in Delhi exceeds 1 lakh; Coronavirus in India rises to 7.42 lakh So far 20,642 people have been killed
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...