கொரோனா பாதிப்பில் தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா; பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..!!!

டெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதன் காரணமாக இருநாடுகளும் எல்லையில் படையை  குவித்தன. இந்நிலையில், எல்லைப்பிரச்னை தொடர்பாக சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் வீ, இந்தியா தரப்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தினார்கள். தொலைபேசி மூலமாக நடந்த  பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இருநாட்டு படைகளும் நேற்று முன்தினம் முதல் திரும்ப தொடங்கின. இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  7,19,665-ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுகின்றன. 500 பேர் வரை உயிரிழக்கின்றன.

இந்நிலையில், லடாக் எல்லை பிரச்சனை, கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30  மணிக்கு காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 6-ம் கட்ட ஊரடங்கு இம்மாதம் இறுதிக்குள் முடிவடையவுள்ளதால்  மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பதா? இல்லை ஊரடங்கை தளர்த்தி கட்டுப்பாடுகள் விதிப்பதா? என்பது குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

Related Stories: