×

திருப்போரூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி

திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உத்திரமேரூரை சேர்ந்த ஒருவர் திருப்போரூர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இவருக்கு, கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவரது பரிசோதனை முடிவு நேற்று தெரிந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குள்ள சிறப்பு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், அந்த காவலர் பணி புரியும் திருப்போரூர் காவல் நிலைய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

*திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சி ஆர்எம்ஐ நகர், அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. செங்கல்பட்டு திட்ட இயக்குனர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) லதா, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய்கிருஷ்ணன், உமா, ஒன்றிய பொறியாளர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பொதுமக்களை பரிசோதனை செய்து, அவர்களுக்கு சளி, இருமல் இருந்தால், சத்து மாத்திரை, கபசுர குடிநீர் வழங்கினர். மேலும், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 87 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டம்  முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 3954 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 136  பேர் நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நேற்று ஒரே நாளில் 8 பேர் பலியாகினர். மாவட்டத்தில் இதுவரை 6851 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Tags : policeman ,Corona ,police station ,Tirupporeur ,Tirupporur , Thirupporeur, police station, police, corona confirmed
× RELATED கொல்கத்தாவை சேர்ந்த போக்குவரத்து காவலர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு