×

இணைய வழி கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: சென்னை பல்கலைக்கழகம், தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை. காஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நிலம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இணையவழி கருத்தரங்கம் நடந்தது. கூகுள் மீட் செயலி வழியாக சிறுகதைகளில் மொழிநடை என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ரவிச்சந்திரன், சங்க பலகை உதவிப் பேராசிரியர் சங்கரநாராயணன், தமிழ்நிலம் அறக்கட்டளை இயக்குநர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

Tags : Internet, Seminar
× RELATED இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு...