×

கும்மிடிப்பூண்டி பிடிஓவுக்கு அஞ்சலி

கும்மிடிப்பூண்டி: கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி ரமேஷ்,  ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம், அலுவலக உதவியாளர் ரவி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் திருவுருவ படத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி மரியாதை செய்து மவுன அஞ்சலி  செலுத்தினர்.

இதேபோல், கிழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவி ஸ்ரீபிரியா மகேந்திரன் தலைமையிலும், கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும், பாதிரிவேடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் என்.டி.மூர்த்தி தலைமையிலும், அயநெல்லூரில் ஊராட்சி தலைவர் லலிதா கல்வி செல்வம் தலைமையிலும், சாணபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவி அம்பிகா பிர்லா தலைமையிலும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Gummidipoondi, PDO, Anjali
× RELATED ஏபிஜே-வின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்.!...