திருமழிசை காய்கறி சந்தையில் சமூக இடைவெளியை கடை பிடிக்க கருவி: எஸ்.பி. துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக இடைவெளியை கடைபிடிக்க புதிய கருவியினை எஸ்.பி அரவிந்தன் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் முயற்சியால் கடைகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கு, ஐரிஎஸ் என்ற புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பொது இடங்கள் மற்றம் அத்தியாவசிய கடைகளில், பொதுமக்களிடையே இரண்டரை அடி இடைவெளியை கடைபிடிக்க வழிவகை செய்கிறது.

முதன்முறையாக திருமழிசை காய்கறி சந்தையில் 3 கடைகளில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. காய்கறி கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், வியாபாரிகள் இரண்டரை அடி இடைவெளி கடைபிடிக்காமல் செயல்பட்டால், ஆட்டோமேட்டிக்காக அலாரம் அடித்து, அங்கு இருக்கும் நபர்களை எச்சரிக்கும் வகையில், இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை ராஜேஷ், சக்தி என்ற இரண்டு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், கடைகள், வங்கிகளில் அடுத்த கட்டமாக இந்த கருவி பொருத்தப்படும் என எஸ்.பி அரவிந்தன் தெரிவித்தார்.

Related Stories: