×

திறந்தவெளியில் பரிசோதனை

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனியார் மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தகவலறிந்த பொதுமக்கள் சிலர் திரண்டனர். பின்னர், ஒரு ஆட்டோவில் சுகாதார ஊழியர்கள் இருவர் முழு கவச உடை அணிந்து இறங்கினர். பின்னர், அவர்கள் அங்கு நின்றிருந்த பொதுமக்களை வரவழைத்து திறந்தவெளியில் தொற்று பரிசோதனை செய்தனர். அதற்கு ஒரு சில சமூக ஆர்வலர்கள் சிலர் திறந்தவெளியில் தொற்று பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து அவர்கள் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு, சுகாதாரத்துறை ஊழியர்கள் தொற்று பரிசோதனையை பாதியில் கைவிட்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து ஆட்டோவில் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர். திறந்த வெளியில் தொற்று பரிசோதனை செய்ததால், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரை மணி நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.


Tags : Open, space, experiment
× RELATED கொரோனா பரிசோதனை