இங்கிலாந்து, சிங்கப்பூரில் சிக்கி தவித்த 327 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: கொரோனா ஊரடங்கால் இந்தியர்கள் பலர், வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் சிக்கி தவித்த 146 பேர், ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அவர்களில் 88 ஆண்கள், 48 பெண்கள், 9 சிறுவர்கள், 1 குழந்தை. இவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக இலவச தங்குமிடமான தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதிக்கு 4 பேரும், கட்டணம் செலுத்தி தங்கும் இடமான சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கு 141 பேரும் தனித்தனி பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு பயணி மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் உள்ள வீட்டிற்கு அனுப்பப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 181 பேருடன் சென்னை வந்தது. அவர்களில் 154 ஆண்கள், 26 பெண்கள், 1 குழந்தை. இவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்த தனியார் மருத்துவக்கல்லூரி விடுதி, ஓட்டல்களுக்கு பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Related Stories: