உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு

புதுடெல்லி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக நீதிமன்றம் இணைக்க வேண்டும் என திமுக மனு செய்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் சேம்பர் நீதிபதி ராமசுப்ரமணியம் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து திமுகவையும் வழக்கில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: