×

கொரோனாவுக்கு இளம்பெண் பலி?

வேளச்சேரி: திருவல்லிக்கேணி முனுசாமி நகர் கஜபதி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நந்தினி (23), கடந்த ஜூன் 27ம் தேதி மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.  பிரசவத்திற்கு பிறகு 30ம் தேதி வீடு திரும்பினர். நேற்று முன்தினம் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதன் முடிவு வராத நிலையில் நந்தினி நேற்று திடீரென இறந்தார்.


Tags : teenager ,Corona , Corona, teenager, kills?
× RELATED ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்