×

கொரோனா தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் கண்டுபிடித்து விடலாம்.: சீரம் நிறுவனம் நம்பிக்கை

புனே: கொரோனா தடுப்பூசியை ஆண்டு இறுதியில் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு மருந்து இன்னும் அதிகாகபுர்வமாக கண்டுப்பிடிக்காததால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிவருகிறது. கொரோனா வைரஸின் வடிவம் பல வகைகளில் உள்ளதால் அதற்க்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்க காலத்தமதம் ஏற்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏழு லட்சத்தை தண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாகவுள்ளது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் நடத்தி வருகிறது. மனிதர்களுக்கு மருந்து அளிக்கும் பரிசோதனை, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது அமெரிக்கா, சீனா நாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து,கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் மத்திய அரசின் அனுமதியுடன் பல தனியார் நிறுவனங்களும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உள்ளது. இந்த நிலையில் புனேயில் நடந்த RT-PCR சோதனை குழாய்களை கையாளுவதை எளிதாக்கும் Compact-XL  என்ற மருத்துவ உபரணத்தின் அறிமுக விழாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அடார் பூனம்வாலா பேசி உள்ளார். அப்போது அவர் கூறியது, கொரோனா தடுப்பூசியை ஆண்டு இறுதிக்குள் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் தடுப்பூசிகளை அவசரப்பட்டு தயாரித்து வெளியிடுவது ஆபத்தானது. தமது நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியில் பாதுகாப்பும், பலனும் கிடைக்கும் என்பதை உறுதி செய்த பின்னரே சந்தைப்படுத்தப்படும் என கூறினார். அதனை தொடர்ந்து தடுப்பூசி வரும் வரை சோதனைகளை அதிகப்படுத்துவதே நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Serum Institute Trust , Coronavirus, vaccine, discovered,Serum ,Institute, Trust
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு