×

பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்ததானம் வழங்கிய 14 ரயில்வே காவலர்கள்: பாராட்டும் விதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி..!!

சென்னை: பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்ததானம் வழங்கிய 14 ரயில்வே காவலர்களை வரவேற்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16 ரயில்வே காவலர்கள் நோய் தொற்றிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பினர்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் அங்கு கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் தாசப்பிரகாஷ் அருகே உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பு, அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காவலர் குடியிருப்பு, ராயபுரம் ரயில்வே காவலர் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளில் வசிக்கும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த காவலர்களை ரயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. சுரேந்திரகுமார், காவலர்களுக்கு பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அளித்து வாழ்த்து தெரிவித்தார். கொரோனாவால் தொற்றுக்கு இதுவரை 57 காவலர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்  41 காவலர்கள் ஏற்கனவே பணிக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 16 காவலர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பிய நிலையில் அதில் 14 காவலர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்ததானம் செய்துள்ளனர். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கி நினைவு பரிசு அளித்துள்ளனர்.

Tags : Railway guards ,Central Railway Station ,Special Train , Plasma Treatment, Rathdanam, 14 Railway Guards
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!