×

சீனாவை எதிர்க்கும் ஹாங்காங்: கட்டுப்படுத்தப்படும் கல்வித்துறை பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் சீனா..!!

ஹாங்காங்: சீனாவால் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காங் கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனா அமல்படுத்த முயன்று வரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான பாடத்திட்டங்கள் கொண்ட புத்தகங்களை நீக்க வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் சீனா தனது ஐந்து அம்சக் கோரிக்கைகள் ஹாங்காங்கை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகிறது.

இதற்கு ஜனநாயகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீன கம்யூனிச அரசு பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கை முழுவதுமாக சீன நாட்டுடன் இணைக்க நினைக்கிறது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில் சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

புரட்சியாளர்களின் கருத்துக்கள் கட்டாயமாக பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் அதனை படிக்கும் மாணவர்களும் தற்காலத்தில் சீன அரசை எதிர்க்கும் சூழல் உருவாகும் என சீனா கருதுகிறது. இதனை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது என புரட்சியாளர்கள்  கூறியுள்ளனர்.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் தன்மை கொண்டது. இதனை மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய புரட்சியாளர்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஹாங்காங் அரசு கருதுகிறது. ஆனால் இதற்கு தற்போது சீனா முட்டுக்கட்டை போடுகிறது.

Tags : China , China, Hong Kong, Education School Curriculum
× RELATED 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான...