தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை; கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று சென்னை கிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் யோகா மையம், மனநல மையம் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக உள்ளது. ரூ 136 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் இந்த மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர் குழு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடி சிகிச்சையளிக்க ஏற்பாடு இங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. சென்னையில் 17500 படுக்கை வசதிகள் உள்ளது. அதனையடுத்து  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதே வேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என முதல்வர் தெரிவித்தார்.

மேலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000  வழங்கியுள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 95 கொரோனா ஆய்வகங்கள் மூலம் தினமும் 35 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 314 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றோம். முகக்கவசம், பிபிடி கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் தேவையான அளவுக்கு தமிழகத்தில் உள்ளன. முழு ஊரடங்கு மூலமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். வெளியில் மக்கள் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதனையடுத்து கூறிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கில் ஒத்துழைப்பு அளித்த மக்களுககு  முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: