காஞ்சிபுரத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2834ஆக அதிகரிப்பு!!!

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் மேலும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுர மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2834ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா தொற்று தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பேரழிவிற்கு தள்ளி வருகிறது. தற்போது, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அதிலும் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக, சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில்தான் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சிபுர மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2834 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1032 ஆக உள்ளது.

மேலும், கொரோனா தொற்று தாக்கப்பட்டு 1661 பேர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுர மாவட்டத்தில் மேலும், 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 105 பேரும் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுர மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: