×

சிவகங்கையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிவகங்கையில் கடந்த 3 நாட்களில் 250 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகி உள்ளது. சிவகங்கையில் நேற்று வரை 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 217 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

தற்போது 340 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிவகங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சிவகங்கை எஸ்.பி.க்கு கொரோனா உறுதியானதை அடுத்து வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோஹித்நாதனை பொறுத்தவரையில் சமூக இடைவெளியை அதிகமாக கடைப்பிடித்து வந்தவர். அதேபோல அதிகம் அவரை யாரும் சந்திப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் அதிக அளவிலான காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sivaganga ,Rohitnathan ,District Police Inspector ,Sivaganga District , Sivaganga, District Police Superintendent, Coronavirus
× RELATED சிவகங்கையை சூறையாடும் கொரோனா:...