கொரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகள்: மாதந்தோறும் ரூ.5000 வழங்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!!!

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். தமிழக அரசு வழங்கிய 1000 ரூபாய் உதவித்தொகை பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை போல, திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி வருவாய் துறையினர் கதவை மூடியதால் மாற்றுத்திறனாளிகள் ஆத்திரமடைந்தனர். மேலும், கோட்டாச்சியரை அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு முடியும் வரை வீட்டில் முடங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான உத்திரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. சமூக பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கவும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைவிடுத்தனர்.

Related Stories: