வெளிநாடுகளில் இருந்த 43% தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.: ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

சென்னை: ஜூலை 11-ம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் என்றும், இதுவரை வெளிநாடுகளில் இருந்த 43% தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி அதன் கீழ் பல விமானங்களை இயக்கியது. இதன் மூலம் இந்தியர்கள் பலர் தாயகம் திரும்பினார். மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்து இருந்தது. தமிழக அரசின் முடிவை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்க திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதாவது ஜூலை 11ம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் என்றும், இதுவரை வெளிநாடுகளில் இருந்த 43% தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. அதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கி உள்ள 25,939 தமிழர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.மேலும் இந்திய சமூக நல நிதியம் மூலம் பாதித்தவர்களுக்கு உதவுவது குறித்தும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: