தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி இழப்பு ஏற்படும் : தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால் அரசுக்கு 1,724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாச்சலம் தொடர்ந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஊரடங்கின் போது சரக்கு வாகனத்திற்கு தடை விதிக்காததால் வரி விலக்கு என்ற கேள்வியே எழவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: