காவல்துறை பணிக்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா?: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி

சென்னை: பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதா? என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து 4 வாரத்தில் விளக்கம் தர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல்துறை பணிக்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை பணிகளை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது மனித உரிமை மீறல் அல்லவா எனவும் கேட்டுள்ளது. காவல்துஐற பணியை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகனை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சித்தரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவும் கூறியது. புகாரை அடுத்து பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு நிரந்தரமாக கலைக்கப்படுமா எனவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தடை விதித்து ஏற்கனவே அந்தந்த சரக எஸ்.பி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். மேலும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சோந்து பணியிலோ, காவல் நிலை பணியிலோ பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related Stories: