நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா?: நேபாள தேசிய கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழு நாளை முடிவு!!!

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை தக்க வைக்க அதிருப்தி தலைவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது திடீர் திருப்பமாக கருதப்படுகிறது. நேபாள தேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபட்டுள்ள உள்கட்சி குழப்பத்தால் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே கே.பி.சர்மா ஒலியை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும், அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பாகவும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது. பின்னர் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேபாள தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 45 உறுப்பினர்களை கொண்ட அதிகாரம் படைத்த நிலைக்குழு நாளை கூடுகிறது.

இதனிடையே பிரதமர் பதவியில் கே.பி. ஷர்மா ஒலி நீடிக்க சீனா தூதரகம் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன தூதர் ஹூ யாங்கி நேபாள தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாதுவ்குமார் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மேலும் அதிபர் பித்யா தேவி பண்டாரியையும், ஹு யாங்கி சந்தித்து ஆலோசனை  நடத்தியிருக்கிறார். கே.பி. ஷர்மா ஒலி பதவி விலக வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியிருப்பவர் தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக தலைவர் புஷ்பா கமல் பிரசண்டா. இவரும் கே.பி. ஷர்மா ஒலியும் நேற்று மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே நாளை நடைபெறவுள்ள நேபாள தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கே.பி. ஷர்மா ஒலிக்கு சாதகமாகவே முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக காத்மாண்டுவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: