×

இந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு செமாரங் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் மையத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவு மையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  அருணாச்சாலபிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 1.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.4 பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Singapore Record ,Indonesia , Earthquake Indonesia, Singapore
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை