×

உச்சத்தை தொடும் ஆபரணத் தங்கத்தின் விலை.! ஒரு சவரன் தங்கம் ரூ.37,128-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் அதிகப்படியான நாட்களில் உயர்ந்தும்,சில நாட்களில் மட்டும் குறைந்தது. ஊரடங்கால் பல பகுதிகளில் நகைக்கடை மூடப்பட்டிருந்தும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24-ம்தேதி  தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. சவரன் ரூ.37,272க்கு விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்சமான விலையாகும். கொரோனா பாதிப்பு நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் 1-ம் தேதி அன்றைய விலை கடந்த மாதம் 24-ம் தேதி சாதனையை முறியடித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.53 அதிகரித்து, ஒரு கிராம்  ரூ.4,684க்கும், சவரனுக்கு ரூ.424 அதிகரித்து, ரு.37,472க்கும் விற்பனையானது.

சவரன் ரூ.37,472 அளவுக்கு உயர்ந்தது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இன்று அந்த விலையை காட்டிலும் சற்று குறைந்து ரூ.37,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ. 37,128க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.19 உயர்ந்து ரூ.4,461க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 53.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே சவரன் ரூ.38,000ஐ நெருங்கி விடுமோ என்ற அச்சம் நகை வாங்குவோரிடம் இருந்து வருகிறது.


Tags : Gold jewelry
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...