சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக 50 துரித செயல் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை : சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக 50 துரித செயல் வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கென 50 துரித செயல் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் 50 துரிதச் செயல் வாகனத்தின் மதிப்பு ரூ.3.80 கோடி மதிப்பீடு என கூறப்படுகிறது. தற்போது இந்த துரித செயல் வாகனம் சென்னையில் பயனுள்ளதாக இருக்கும் எனவும், கொரோனா தடுப்பு பணிக்காக இந்த வாகனங்கள் பயன்படத்தப்படும் என கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரூ. 1,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முகவரி மாறி வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இல்லத்துக்கே சென்று நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நிதி உதவி வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார். ஊரடங்கால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தலா ரூ.1,000 வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இருப்பிடம் மாறி வசிப்பதாகவும், அவர்கள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories: