×

வங்கிகளில் கூட்ட நெரிசல்

திருவள்ளூர்: திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி அருகே உள்ள வங்கியில் சமூக இடைவெளியின்றி தினசரி ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதேபோல், சி.வி.நாயுடு சாலையில் உள்ள வங்கி உட்பட பல வங்கிகளில் பலர் குவிந்தனர். இதனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து வங்கிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : banks , Banking, crowdfunding
× RELATED வங்கிகளில் அடகு வைக்கப்படும்...