×

ஏற்கனவே 17 பேருக்கு பாதிப்பு தேவஸ்தான ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா: திருப்பதியில் சோதனை தீவிரம்

திருமலை: திருமலை தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 50 பேருக்கு கொரோனா சோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் கோயில் அர்ச்சகர், நாதஸ்வர வித்வான், விஜிலென்ஸ் பாதுகாப்பு ஊழியர்கள் என மொத்தம் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் தினமும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு செய்த பரிசோதனையில் பாலாஜி நகரில் பொதுமக்கள், தேவஸ்தான பணியாளர்கள் என 50 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக  இவர்கள் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். திருமலையில் தேவஸ்தானம் சார்பில் தினமும் 100 பக்தர்கள், 100 தேவஸ்தான பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 17 people affected, Devasthani staff, 50 others, Corona, Tirupati, test intensity
× RELATED சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.7.84 கோடி...