×

ட்வீட் கார்னர்: போட்டாஸ் அசத்தல்!

ஆஸ்திரியா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் முதல் சுற்றில், மெர்சிடிஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் பந்தய தூரத்தை (71 லாப்ஸ்) 1 மணி, 30 நிமிடம், 55.739 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். பெராரி அணியின் சார்லஸ் லெக்ளர்க் (+2.700 விநாடி) 2வது இடமும், மெக்லாரென் ரெனால்ட் வீரர் லாண்டோ நோரிஸ் (+5.491வி.) 3வது இடமும் பிடித்தனர். மெர்சிடிஸ் நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் (+5.689வி.) 4வதாக வந்தார். பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் 10வது இடத்துடன் திருப்தி அடைந்தார். அணி நிர்வாகியுடன் போட்டாஸ் சியர்ஸ் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் படத்தை மெர்சிடிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெற்றியைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளது.

Tags : Tweet Corner, Potas, Wow!
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்