×

சில்லி பாயின்ட்…

* கிரிக்கெட்டிலும் நிறவெறி இருக்கத்தான் செய்கிறது என்று இங்கிலாந்து அணிக்காகக் களமிறங்கிய முதல் கறுப்பின வீரரான ரோலண்ட் புட்சர் (66) வேதனை தெரிவித்துள்ளார். இவர் வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறியவர். 1980ல் இயான் போதம் தலைமையிலான அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 38 பந்தில் 52 ரன் விளாசி முத்திரை பதித்தார். ஒரு போட்டியின்போது பவுன்சர் பந்துவீச்சு இடது கண்ணில் பலமாகத் தாக்கியது இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
* தற்போதைய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் உலகின் தலைசிறந்த கூட்டணியாக விளங்குவதற்கு அவர்களின் உடல்தகுதி தான் முக்கிய காரணம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டி உள்ளார்.
* ஊரடங்கு முடிந்த நிலையில் மீண்டும் பயிற்சியை தொடங்கி இருந்தாலும், மீண்டும் முழு வேகத்தில் விளையாட இன்னும் சில நாட்கள் ஆகும் என்று ஸ்பெயின் பேட்மின்டன் வீராங்கனை கரோலினா மரின் தெரிவித்துள்ளார்.
* டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருப்பது மிகவும் கடினமான பணி. அந்த நெருக்கடியை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை… என்று தென் ஆப்ரிக்க வீரர் குவின்டன் டி காக் கூறியுள்ளார்.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பு கூட மிகக் குறைவு தான் என்று 77 சதவீத ஜப்பானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* உலக கோப்பை டி20 தொடரை திட்டமிட்டபடி நடத்துவது அல்லது ஒத்திவைப்பது குறித்து விரைந்து முடிவு எடுக்காமல் ஐசிசி காலம் தாழ்த்தி வருவது சரியல்ல என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதி ருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chili, Point
× RELATED சில்லிபாயின்ட்..